முகப்பேர் முதலியார் சங்கம்


சங்கத்தின் நோக்கங்கள் :

இச் சங்கம் தம் சமூகத்தினர் அனைவரையும் ஒன்று சேர்த்து, ஒற்றுமைப்படுத்தி, அனைவருக்கும் ஓர் இணைப்பு பாலமாக செயல்படும்

இச் சங்கம் தம் சமூகத்தில் உள்ள இளைஞர்களுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்து படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டி நெறிமுறைகளை தெரிவித்து, சுய வேலை வாய்ப்பை ஊக்குவித்து அதற்கான வழிமுறைகளையும் உறுதி செய்யும்.

தம் சமூகத்தில் உள்ள நலிவடைந்தவர்களை அடையாளம் கண்டு அவர்கள் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முற்னேற்றம் அடைய வழி முறைகளை ஏற்படுத்தும்.

தம் சமூகத்தினரிடையே திருமண உறவுகள் ஏற்படுத்தும் விதமாக திருமண தகவல் மையம், உறவின் முறை நிகழ்வுகள், ஒன்று கூடல் போன்றவற்றை ஏற்பாடுச் செய்வது.

தம் சமூகத்தில் உள்ள வணிக பெருமக்கள், தனவான்கள், மற்றும் அறிவுச் செழுமையுடையோரை அழைத்து வழிகாட்டி நிகழ்ச்சிகள் மற்றும் ஆலோசனை வழங்குதல்.

தம் சமூகத்தில் உள்ள தொழில் முறைவோர், அரசு அதிகாரிகள், அறிவியளாலர்கள், விளையாட்டு வீரர்கள், சாதனையாளர்கள் ஆகியோரை நேரில் சென்றும், சங்க நிகழ்ச்சிகளுக்கு வரவழைத்தும் பெருமைப்படுத்துவது.

பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற, சாதனை படைத்த தம் சமூக மாணவர்களை பாராட்டி பெருமைப்படுத்துவது, மற்றும் அவர்களின் கல்விக்கு தேவையான பொருளாதார உதவி உள்ளிட்ட எல்லா விதமான உதவிகளையும் செய்வது.

தம் சமூகத்தில் உள்ள தகுதிப்படைத்தோர், மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் தேர்வாணைய தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டி அவர்களுக்கான பயிற்சி வகுப்புகள், புத்தகங்கள், உறைவிட வசதிகள், பொருளாதார உதவிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வது.

சங்க உறுப்பினர்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கவதற்காக சட்ட வல்லூநர்கள் கொண்ட சட்ட அவையம் ஏற்படுத்துதல், மருத்துவ உதவி மற்றும் ஆலோசனை வழங்குவதற்காக மருத்துவர்கள் கொண்ட மருத்துவ மையம் ஏற்படுத்துதல்.

கல்வி மற்றும் அறிவுச் செறிவு நிறைந்த பொழுது போக்கிற்கான நூலகம் அமைத்தல், கணிணி பயிற்சி மையம் அமைத்தல், விளையாட்டு மையங்கள் அமைத்தல் மற்றும் அதற்கான பயிற்சியும் கொடுத்தல்.

தம் சமூக மக்களின் பொருளாதாரம் மற்றும் வணிக மேம்பாட்டினை கருத்தில் கொண்டு, வணிகம் சார்ந்த கட்டமைப்பை ஏற்படுத்தி அதில் சங்க உறுப்பினர்களை ஈடுபடுத்தி பயனடையச் செய்தல்.

தம் சமூக மக்களின் குடும்ப விழாக்கள், ஒன்று கூடல்கள், திருமண விழாக்கள், வழிபாடுகள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றில் பங்கு பெற்று ஒற்றுமையை உறுதிபடுத்துதல்.

தம் சமூக மக்களின் மரணம் மற்றும் பிற துயரங்களில் பங்கெடுத்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அவர்கள் அந்த துயரங்களிலிருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு வர உறுதுணையாக இருத்தல். நிவாரண நிதி கொடுத்தல்.

வெள்ளம், பஞ்சம் மற்றும் பிற இயற்கை பேரிடர்களின் போது தம் சமூக மக்களை ஒன்று திரட்டி நேரடியாகவும் அரசாங்கத்திற்கு உறுதுணையாகவும் இருந்து உதவிகள் மற்றும் மீட்ப பணிகளை செய்தல்.

இச் சங்கத்தின் கருத்தையும் செயல்பாட்டையும் தெரியப்படுத்த செய்தி ஏடு மற்றும் நவீன தகவல் தொழில் நுட்ப ரீதியான செய்தி பறிமாற்று ஏற்பாடுகளை உருவாக்கி செயல்படுத்துதல்.

அரசு, தனியார், வங்கிகள் மற்றும் பிற கட்டமைப்புகளால் கிடைக்கப்பெறும் நன்மைகள், சலுகைகள், வாய்ப்புகள் ஆகியவற்றை தம் சமூக மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையான எல்லாவித ஏற்பாடுகளையும் செய்தல்.

அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கான இட ஒதுக்கீடு முதலியன தம் சமூக மக்களையும் சென்றடைய வேண்டி தம் சமூக மக்களையும் அரசின் இட ஒதுக்கீட்டின் வரையறைக்கு உட்படுத்த தேவையான எல்லாவித முயற்சிகளையும் மேற்கொள்ளுதல், பரிந்துரை செய்தல்.

இச் சங்கத்தின் நோக்கத்தோடு இசைந்த ஏனைய சங்கத்தோடு இணைந்து பணியாற்றுவது.

மேற்படி நோக்கங்கள் அல்லாது எதிர்காலத்தில் சேர்கப்படும் நோக்கங்கள் நற்பணிகள் ஆகியவற்றிற்காகவும் இச்சங்கம் பாடுபடுவது.

முகப்பேர் முதலியார் சங்கம்