வசந்தம் மனவளர்ச்சி குன்றிய பள்ளி மாணவர்களுக்கான இரவு விருந்து உணவு திரு. பாஸ்கரன் மற்றும் திருமதி. ராணிபாஸ்கரன் தம்பதியருடன்..
முகப்பேர் முதலியார் சங்கம் 28/12/2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதியரசர் திரு. வள்ளிநாயகம் ஆரம்பித்து தலைவர் பாஸ்கரன் மற்றும் செயலாளர் பிரபாகர், பொருளாளர் பிரபாகரன் மற்றும் நிர்வாக உறுப்பினர் அனைவரின் ஒத்துழைப்பில் சிறப்புடன் நடைபெற்று கொண்டிருக்கிறது.
கொரோனா உதவியாக சங்கத்தின் சார்பில் ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கு நிவாரனமாக 5 கிலோ அரிசி, 1 கிலோ சமையல் எண்ணெய் மற்றும் 1 கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் உறுப்பினர் மற்றும் அவர் தம் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் மகரிஷி வடிவமைத்த எளிய முறை உடற்பயிற்சி அனைவருக்கும் செய்து தரப்பட்டது.
அடுத்தபடியாக 25/07/2020 சனிக்கிழமை அன்று காலை 7 மணியளவில் 344, திருக்குறள் முனுசாமி தெரு, பன்னீர்நகர், முகப்பேர், இந்தியன் வங்கி அருகில், கபசுர குடிநீர் 200 முகப்பேர் நகர் வாழ் மக்களுக்கு தலைவர் மற்றும் செயலாளர் தலைமையில் அளிக்கப் பட்டது.
இதையடுத்து நமது சங்கத்தின் முக்கிய நோக்கமான திருமண வரன் பதிவு இலவசமாக அனைத்து உறுப்பினர் மற்றும் அவர்கள் உறவினர் அனைவருக்கும் இலவசமாக பதிவு செய்யப்பட்டது என்பதை மகிழ்ச்சியுடன் பதிவு செய்கிறோம். இது நாள் வரை ஆண், பெண் இருபாலரும் சேர்த்து 125 பதிவுகள் முடிவடைந்துள்ளது.
மேலும் சிறப்புடன் இந்த சேவையை செம்மையாக செய்ய இருக்கிறோம், நமது சமுதாயத்தை சேர்ந்த அனைவரும் இந்த அரிய இலவச திருமண வரன் பதிவு வாய்ப்பை நல்கிட கோருகிறோம்.